செய்திகள்

குழந்தைகளுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் - கலெக்டர் சிவஞானம்

Published On 2019-06-13 11:17 GMT   |   Update On 2019-06-13 11:40 GMT
குழந்தைகளுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அவர் பேசியதாவது:-

குழந்தைகள் சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்வதற்கு என்ன தேவையோ அதை உருவாக்கி தரவேண்டியது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின் கடமையாகும். குழந்தை பருவத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதின் முக்கிய நோக்கமானது, அவர்கள் கல்வியோடு சேர்ந்து, நல்ல குணங்கள், சிறந்த பண்புகளையும் கற்றுக்கொண்டு அவர்களின் ஆற்றலை பெருக்கி சமுதாயத்தில் ஒரு உயர்ந்தநிலைக்கு உயர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் திருவள்ளுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராமகிருஷ்ண அய்யலு, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசைசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News