செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை

Published On 2019-06-12 18:03 GMT   |   Update On 2019-06-12 18:03 GMT
நிலக்கோட்டை பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘நிலக்கோட்டை தாலுகாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நிலக்கோட்டை பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News