செய்திகள்

மதுரையில் கார்களின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போன்கள் கொள்ளை

Published On 2019-04-27 13:44 GMT   |   Update On 2019-04-27 13:44 GMT
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கார்களின் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை:

மதுரை சித்திரை திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த சுனு (வயது 39) காரில் மதுரை வந்தார். அவர் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் யாரோ காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அவர்கள் காருக்குள் இருந்த 4 பேக், 2 செல்போன்கள், 2 கிராம் மோதிரம் போன்றவற்றை திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

திண்டுக்கல் குருநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (48) நிறுத்தியிருந்த காரில் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடப்பட்டதாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதே போல் எல்லீஸ்நகர் வைகை தெருவைச் சேர்ந்தவர் கருத்ததுரை (34) காரிலும் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டதாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கொடிக்குளம் ஆனந்த ராஜன் நகரைச் சேர்ந்த டேனியல் தங்கராஜ் (49). கடந்த 23-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் யாரோ வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 2 சி.சி. டி.வி. காமிரா மற்றும் பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News