செய்திகள்

ஓசூர் அருகே காட்டு யானை துரத்தியதில் விவசாயி கீழே விழுந்து படுகாயம்

Published On 2019-03-08 12:09 GMT   |   Update On 2019-03-08 12:09 GMT
ஓசூர் அருகே காட்டு யானை துரத்தியதில் விவசாயி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தேன்கனிகோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 40).

இவர் தனக்கு சொந்தமான கால்நடைகளை செபஸ்டியான் திண்ணை என்ற இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஏராளமான காட்டு யானைகள் வந்தது. அப்போது காட்டு யானை கூட்டத்தில் பிரிந்த ஒற்றை யானை ஒன்று அந்தோணிராஜை துரத்தியது.

இதனையடுத்து அவர் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். ஆனால் காட்டு யானை விடாமல் துரத்தியதால் அந்தோணிராஜ் அங்குள்ள குழிக்குள் விழுந்துவிட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்தோணிராஜின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதி பொதுமக்கள் அதிக ஒலிகளை எழுப்பி ஒற்றை காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். வெகுநேரத்திற்கு பின்பு காட்டுயானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் பலத்த காயங்கள் அடைந்த அந்தோணிராஜை மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News