search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer injured"

    • காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • விவசாயியின் கால் பகுதியில் காட்டு மாடு கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

    குறிப்பாக காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமை தாக்கி உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இன்று காலை தனது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக சென்றுள்ளார்.அப்போது பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்பகுதியில் கடந்த 15 நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டெருமை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.அதனை விரட்ட முயற்சி செய்தபோது விவசாயி மனோகரனை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் கடுமையாக தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.சம்பவம் அறிந்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் பஸ் மீது பைக் மோதியது
    • போலீசார் விசாரணை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிரா மத்தை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 45 ) , ஆதி மூலம் மகன் அருண் . விவசாயி . இவர்கள் இருவரும் கலவையில் இருந்து வேம்பிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . கலவையை அடுத்த அருந்ததிபாளையம் அருகே சென்றபோது லோகநாதன் ஓட்டிச் சென்ற பைக் தனியார் பஸ் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப் பட்டனர் . அவர்களில் அருணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து , மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து கலவை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேன்கனிக்கோட்டை அருகே விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை ஒற்றை யானை விரட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் ஏராளமான யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று 75-க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டும்போது அந்த யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை பிரிந்து வந்தது. 

    அந்த யானை நொகனூர் அருகே விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த நொகனூர் கிராமத்தை சேர்ந்த பைரப்பா (வயது55) என்ற விவசாயியை துரத்தியது. யானையிடம் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடினார். அப்போது கீழே விழுந்து தலை, கை கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த யானை அவரை தாக்காமல் திரும்பி சென்று விட்டது. 

    காயம் அடைந்த விவசாயி பைரப்பா தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம், வனக்காப்பாளர்கள் ஆறுமுகம், ஆனுசாமி ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். 

    ×