செய்திகள்

திருவையாறு அருகே விபத்து - 15 பேர் படுகாயம்

Published On 2019-02-11 10:05 GMT   |   Update On 2019-02-11 10:05 GMT
திருவையாறு அருகே விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் மகன் மணிக்குமாருக்கும் ராமநல்லூரை சேர்ந்த அறிவழகன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஒரு வேனில் அப்பகுதி மக்கள் சுவாமிமலை சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பழனம் காமராஜர் நகர் அருகே மெயின்ரோட்டில் வரும்போது முன்னால் கரும்பு லாரி மற்றும் அதற்கு பின்னால் சிமெண்ட் லாரி சென்றுள்ளது. அதற்கு பின் வேன் வந்துகொண்டிருந்தது அப்போது திடீரென முன்னாள் சென்ற கரும்பு லாரி மீது சிமெண்ட் லாரி மோதி நின்றது. இதனால் நிலைதடுமாறிய வேன் சிமெண்ட் லாரி மீது மோதியது இதில் வேனில் பயணம் செய்த சின்னப்பிள்ளை, அம்சம்மாள், கோவிந்தம்மாள், சம்பத், ரேவதி, கங்காமிர்தம், மலர்கொடி, மோகன், சந்துரு, , கோகுல், பிரபாகரன், சக்ரவர்த்தி உள்பட 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News