செய்திகள்

மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு

Published On 2019-01-18 07:32 GMT   |   Update On 2019-01-18 07:32 GMT
மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #CentralGovernment

சென்னை:

மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப் பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வந்தது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்து மத்திய அரசு அரசாணையும் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், சட்டத்துறை செயலாளருமான ஆர்.எஸ். பாரதி இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 


அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது முற்றிலும் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. #DMK #CentralGovernment

Tags:    

Similar News