செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழிசை சந்திப்பு

Published On 2018-12-17 09:18 GMT   |   Update On 2018-12-17 09:18 GMT
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் சென்னை திரும்புவதற்காக நேற்று இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி வைக்கும் சூழ்நிலை அ.தி.மு.க.வுக்கு உருவாகும். அப்போது யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி அ.தி.மு.க. முடிவு செய்யும்” என்றார்.

இந்தநிலையில் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.

சென்னையில் நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அவர்கள் வலுவான கூட்டணி அமைக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக தமிழிசை சவுந்ததராஜன் பேச்சு நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
Tags:    

Similar News