செய்திகள்

இடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-12-09 13:37 GMT   |   Update On 2018-12-09 13:37 GMT
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #kbalakrishnan #byelection #tngovt

திருவாரூர்:

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் தமிழக அரசு செயலற்ற அரசாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் கோவில், மடங்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ளது. எனவே தமிழக அரசு அந்த இடங்களுக்கு பட்டா வழங்கி வீடுகள் கட்டி தரவேண்டும்.


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக பிரதமரை சந்தித்து கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டது ஏற்புடையது அல்ல. அனைத்து கட்சிகளை ஆலோசித்து அல்லது அழைத்து கொண்டு பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். அல்லது எம்.பி.க்களை அழைத்து சென்றாவது பிரதமரை சந்தித்து இருக்கலாம்.

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு காலம் கடத்துவதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்த அஞ்சுகிறது. அதனால் காலம் கடத்தி வருகிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. இதனால் பயந்துபோய் எந்த தேர்தலையும் நடத்தாமல் உள்ளது.

தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை கோரி இருக்கிறது. ஆனால் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு மட்டும் ஏன் பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #byelection #tngovt

Tags:    

Similar News