செய்திகள்

மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழிசை

Published On 2018-11-30 18:04 GMT   |   Update On 2018-11-30 18:06 GMT
மருத்துவ காப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சைக்காக அரசு அளிக்கும் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 50 கோடி மக்கள் பலன்பெறும் அளவுக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.5 லட்சம் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் 77 லட்சம் பேர் பயனாளியாக மாறுவார்கள்.

இன்னும் 80 லட்சம் பேர் ஏற்கனவே மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்று வருவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டில் கிடைக்கும் தொகை ரூ.5 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருப்பதால், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுதொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் மருத்துவ காப்பீட்டு இல்லாத மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு முழுவதுமாக ரூ.5 லட்சம் தொகையானது பிரதமரின் திட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவர். மேலும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2–வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
Tags:    

Similar News