செய்திகள்

சொத்தை எழுதி தராததால் மலையில் இருந்து விழுந்து வாலிபர் உயிரை மாய்த்த பரிதாபம்

Published On 2018-11-21 11:41 GMT   |   Update On 2018-11-21 11:41 GMT
சேர்ந்தமரம் அருகே சொத்தை எழுதி தராததால் மலையில் இருந்து விழுந்து வாலிபர் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடி:

சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டியை சேர்ந்த மகாராஜன் மகன் சேர்ம செல்வன் (வயது20). இவர் கேரளாவில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி விலக்கில் இருந்து பாம்புகோவில் செல்லும் வழியில் மலைக்குன்றின் கீழே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேர்மசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சேர்மசெல்வனின் தந்தைக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சேர்ம செல்வனின் தந்தை அப்பகுதியில் 10 சென்ட் இடம் வாங்கினாராம். அதில் 5 சென்ட் இடத்தை தனக்கு எழுதி தருமாறு சேர்ம செல்வன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து சேர்ம செல்வன் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சேர்மசெல்வன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News