என் மலர்
நீங்கள் தேடியது "property"
- பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.
- கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை.
புதுடெல்லி :
கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலானவை வங்கி டெபாசிட்கள் ஆகும்.
கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காந்திநகரில் வேறு 3 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டு மனையை மோடி வாங்கி இருந்தார். அதில் 4 பேருக்கும் சமபங்கு உள்ளது. தனது ஒரே அசையும் சொத்தான அந்த நிலத்தில் தனது பங்கை அவர் நன்கொடையாக அளித்து விட்டார். அதனால் அவரிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.
கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனக்கு ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளார்.
- அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
- சொத்தில் பங்கு வாங்கி வராததால் கம்பியால் அடித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி ஊராட்சி கரிகாலன் குட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 34), கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
2-வது திருமணம்
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தை சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன்பு அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அந்த நிலத்தை விற்பனை செய்தால் அதற்குரிய பங்கு தொகை கேட்டு வாங்கி வரும் படி அகல்யாவிடம் மணிகண்டன் கூறினார். இது தொடர்பாக கடந்த மாதம் 14-ந் தேதி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்கு வாதமாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கினார். இதில் காயம் அடைந்த அகல்யா வீட்டில் இருந்தார்.
தகவல் அறிந்த அவரது பெற்றோர் அகல்யாவை மீட்டு கடந்த மாதம் 17-ந் தேதி துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது, மனைவியின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு ஏற்கனவே கூறி வந்தேன், இந்த நிலையில் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பதை அறிந்த நான் அதில் பங்கு தொகையை வாங்கி வரும் படி கூறினேன்.
ஆனால் அதற்கும் மறுத்த அவர் என்னிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைக்க போலீசார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையால் பயனடைந்தவர்களில் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230759 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.
அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011-ம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தேவாரம் போலீசார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆட்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
கணக்கில் வராத பணம், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில், இனிமேல் சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ITDept ##ITnotice #cashransaction #propertypurchase
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.
அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
அதுகுறித்த அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது.
அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும். #AsifAliZardari
அப்படியென்றால், சொத்தை வாங்கும்போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தைப் பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். சலுகை விலையில் கிடைக்கிறது என கருதி அவசர அவசரமாக வாங்கி, அவதிப்படுவதை தவிருங்கள். பிரச்சினை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.
நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல வில்லங்கச் சான்றிதழ் 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பூங்காவனம் (63). இவர்களது மகன்கள் பழனி (40), செல்வம் (37). பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார்.
அதன்பிறகு மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்டு உள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். கண்ணீர்விட்டு அழுத இருவரும், கலெக்டரிடம் நன்றி தெரிவித்தனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு ஆறுதல் கூறினார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.
முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டியை சேர்ந்த மகாராஜன் மகன் சேர்ம செல்வன் (வயது20). இவர் கேரளாவில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி விலக்கில் இருந்து பாம்புகோவில் செல்லும் வழியில் மலைக்குன்றின் கீழே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேர்மசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சேர்மசெல்வனின் தந்தைக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சேர்ம செல்வனின் தந்தை அப்பகுதியில் 10 சென்ட் இடம் வாங்கினாராம். அதில் 5 சென்ட் இடத்தை தனக்கு எழுதி தருமாறு சேர்ம செல்வன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து சேர்ம செல்வன் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சேர்மசெல்வன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews