செய்திகள்

கஜா புயலால் 7 மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை

Published On 2018-11-15 08:03 GMT   |   Update On 2018-11-15 08:03 GMT
கஜா புயலால் நாகை கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. #GajaCyclone #Gaja

சென்னைக்கு அருகே சுமார் 290 கி.மீ. நாகைக்கு அருகே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று இரவு 8 மணிமுதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏழு மாவட்டங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்களை மாலை நான்கு மணிக்குள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இந்நிலையில் ஏழு மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் எனவும், இந்த மழை 16-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. #GajaCyclone #Gaja
Tags:    

Similar News