செய்திகள்

தொட்டியம் ஏழூர்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

Published On 2018-11-02 13:20 GMT   |   Update On 2018-11-02 13:20 GMT
தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம்:

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில் தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரோஷிகா (வயது 1) என்ற பெண் குழந்தை உள்ளது. 

ரோஷிகாவிற்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையளிப்பதற்காக சென்றனர். அங்கு குழந்தை ரோஷிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில் குழந்தை ரோஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News