செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை குழு ஆலோசனை

Published On 2018-10-17 07:27 GMT   |   Update On 2018-10-17 07:27 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. #DMK #MKStalin
சென்னை:

தி.மு.க. வின் செயற்குழு கடந்த மாதம் நடந்தது. அதில் அ.தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.



இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், விபி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்பு நிர்வாகிகள் ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர்

உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி, அ.தி.மு.க. அரசை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். #DMK #MKStalin

Tags:    

Similar News