செய்திகள்

பாரிமுனை, லாட்ஜில் ரூ.34 லட்சம் பணத்துடன் வாலிபர் கைது

Published On 2018-10-09 07:57 GMT   |   Update On 2018-10-09 07:57 GMT
பாரிமுனை மற்றும் லாட்ஜில் ரூ.34 லட்சம் பணத்துடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

பாரிமுனை, மண்ணடி தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி விற்கப்படுவதாக வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உதவி கமி‌ஷனர் ஆனந்த குமார் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் தனிப்படை போலீசார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது லாட்ஜில் உள்ள படிக்கட்டு பகுதியில் 40 வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது லாட்ஜில் இருந்த வாலிபர் ஒருவர் கைப்பையுடன் ஓட்டம் பிடித்தார்.

அவரை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். பையில் கட்டு கட்டாக ரூ.34 லட்சத்து  60 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்த பயாசுதீன் என்பது தெரிந்தது.

பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.34 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பயாசதீனிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே வெளிநாட்டு மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமது பாஷிமை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News