செய்திகள்
கோப்புப்படம்

8 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Published On 2018-10-03 06:25 GMT   |   Update On 2018-10-03 06:25 GMT
சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். #TNElectionsCEO #SatyabrataSahoo
சென்னை:

சென்னையில் 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் தங்களது பெயர்களை சேர்க்க மனு செய்துள்ளனர்.

முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.


சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கமி‌ஷனர் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள், உதவி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது? சிறப்பு முகாம்களில் அரசியல் கட்சியினர் எவ்வளவு மனு கொடுத்துள்ளனர். இதில் தகுதியான மனுக்கள் எவ்வளவு போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #TNElectionsCEO #SatyabrataSahoo
Tags:    

Similar News