செய்திகள்

கவிஞர் காசிமுத்துமாணிக்கம் இல்ல திருமண விழா- மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்

Published On 2018-09-13 11:10 GMT   |   Update On 2018-09-13 11:10 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற உள்ள கவிஞர் காசிமுத்துமாணிக்கம் இல்ல திருமண விழாவை மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.
சென்னை;

தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் - வள்ளிக்கண்ணு ஆகியோரின் மகள் சசிகலாவுக்கும், ராமலிங்கம்-சுந்தரி ஆகியோரின் மகன் ஆர்.முத்துவீரப்பனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் நாளை (14-ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.

திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்கிறார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், கவிஞர் வைரமுத்து, ஜவாஹிருல்லா, பொன்குமார், என்.ஆர்.தனபாலன்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சுதர்சனம் மற்றும் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ., இரா.ராசன், அன்பில் பொய்யாமொழி, மகேஷ், ப.ரங்கநாதன், வி.ஜி.ராஜேந்திரன், சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

திருமண விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். கவிஞர் விவேகா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மாலை 7 மணிக்கு நடைபெறும். இதில் லஷ்மண் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
Tags:    

Similar News