செய்திகள்

கோவையில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்- தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2018-09-11 09:26 GMT   |   Update On 2018-09-11 09:31 GMT
கோவையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை சாய்பாபா காலனி சபாபதிவீதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ரித்விகா என்ற மகளும் உள்ளனர்.

ரித்விகா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று இரவு பெற்றோர் வெளியே செல்ல வேண்டி இருந்ததால் குழந்தைகளை வீட்டில் வைத்து விட்டு கதவை பூட்டிச் சென்றனர்.

இவர்களது வீட்டில் ‘நீமோ மேத்யூ’ வகை நாய் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் ரித்விகாவின் அண்ணன் கூண்டை திறந்து விட்டான். வெளியே பாய்ந்து வந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரித்விகாவை கடித்துக்குதறியது. இதனால் ரித்விகா அலறித் துடித்தாள். 2 குழந்தைகளும் கத்தி கூச்சல் போட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். நாயிடம் இருந்து சிறுமியை மீட்ட அவர்கள் பெற்றோருக்கு தகவல் கூறினர். பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து, ரித்விகாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்து குதறியதால் ரத்த வெள்ளத்தில் ரித்விகா மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் ரித்விகாவை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News