செய்திகள்

ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கோவையில் 14-ந் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-07 11:16 GMT   |   Update On 2018-09-07 11:16 GMT
ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கோவையில் 14-ந் தேதி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.#Congress
கோவை:

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வீனஸ்மணி முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, இந்திய ராணுவத்துக்காக ரபேல் ரக போர் விமானம் வாங்க ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசு மிகப் பெரிய ஊழலை செய்துள்ளது. எனவே மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் வருகிற 14-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜ், சிவாஜி கந்தசாமி, ரத்தின சாமி, என்.சின்னராஜ்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், வக்கீல் பிரிவு வரதராஜ், பிரபாகரன், ஜெகநாதன், நாகராஜன், மகிளா காங்கிரஸ் சுடர்விழி, சேவாதள தலைவர் ஆகாஷ், சிவக்குமார், ராஜேந்திரன், பேரூர் மயில், தங்கதுரை, கணேசன், பொன்னுசாமி, ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #Congress
Tags:    

Similar News