செய்திகள்

4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

Published On 2018-09-04 08:16 GMT   |   Update On 2018-09-04 08:16 GMT
தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருவது பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் அந்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த கூட்டத்தில் தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

குறிப்பாக பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சரியான முறையிலும், விரைவாகவும் சென்று அடைகின்றதா என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியம் பல்லவி பல்தேவ், மற்றும் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், மற்றும் கண்காணிப்பு அலுவலர் டேவிதார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார் ஆகியோரை ஆய்வு செய்தார்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் பழனி சாமி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மதுமதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News