செய்திகள்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்- 2 பஸ்கள் சிறை பிடிப்பு

Published On 2018-08-23 08:59 GMT   |   Update On 2018-08-23 08:59 GMT
குடிநீர் விநியோகம் முறையாக செய்யவில்லை என கூறி 2 பஸ்களை சிறை பிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே ஜாலியூர் என்ற பகுதி உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி உள்ளது.

இங்கு டேங்க் ஆப்பரேட்டராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி, பஞ்சாயத்து கணக்கர் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பெண்கள் மகளிர் மன்ற நிர்வாகி மலர்விழி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சையும், பள்ளி பஸ்சையும் சிறை பிடித்தனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை மறியல் நடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் பி.டி.ஓ. அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிட சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இனிமேல் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ்களையும் விடுவித்தனர். #tamilnews
Tags:    

Similar News