செய்திகள்

குலசேகரன்கோட்டையில் அடுக்குமாடி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மாணிக்கம் எம்.எல்.ஏ. உறுதி

Published On 2018-08-20 12:25 GMT   |   Update On 2018-08-20 12:25 GMT
வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டையில் அடுக்குமாடி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணிக்கம் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
வாடிப்பட்டி:

வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை பகுதியில் மாணிக்கம் எம்.எல்.ஏ. பொது மக்களிடம் குறைகள் கேட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று போடி நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள நியாய விலைக்கடையில் குடிமைப் பொருட்களை வாங்கி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன்கடை இங்கு கட்டி கொடுத்துள்ளேன்.

தற்போது தரைமட்டம் உயர்ந்ததால் இந்த பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளின் வாசல்படிகள் குகைவாசலாய் மாறிபோய்விட்டது. அவற்றை குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனாட்சி அம்மன் கோவில் முன்பு செல்லும் பொன்பெருமாள் கண்மாய் வரத்து கால்வாய் ஓடையின் இருபுறத்திலும் தடுப்புசுவர் கட்டப்படும். வடிகால், குடிநீர், தெரு விளக்கு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அங்குள்ள தெருக்களில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தெருக் குழாயில் வரும் தண்ணீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட 71சி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News