இந்தியா

அடுத்தது யார் என்ற மோசமான போர் பா.ஜனதாவில் நடந்து கொண்டிருக்கிறது: கெஜ்ரிவால்

Published On 2024-05-24 12:29 GMT   |   Update On 2024-05-24 12:29 GMT
  • அத்வானி ஓய்வு பெற்றார். முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்றார்
  • சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டார். வசுந்தர ராஜே நீக்கப்பட்டார். கத்தார் சஹாப் நீக்கப்பட்டார். டாக்டர் ராமன் சிங் நீக்கப்பட்டர்.

டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், தனது தேர்தல் பிரசார வியூகத்தை வேறு மாதிரி கையாண்டார். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்றாலும் 75 வயது நிறைவடைந்ததும், அமித் ஷாவிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பார் என பரபரப்பு குண்டை வீசினார்.

அதுவரை பா.ஜனதா தலைவர்கள் பேச்சுகளுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பதில் அளித்து வந்தனர். இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மோடி மீண்டும் நாட்டின் பிரதமராகி, 3-வது முறையாக பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்வார் என்றார்.

இந்த நிலையில் இன்று இந்தியா டுடே டி.வி.க்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டிளித்தார். அப்போது பிரதமருக்கு அடுத்தது யார்? என்ற மோசமான போர் பா.ஜனதாவில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

நீங்கள் இண்டர்நெட்டை பார்த்தீர்கள் என்றால், 2019-ல் அமித் ஷா 75 வயது மட்டும் அதற்கு மேல் வயதுடைய எங்களுடைய கட்சியின் அனைத்து தலைவர்களும் ஓய்வடைவார்கள். இதில் எந்த சமரசமும் கிடையாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக இந்த விதியை கொண்டு வந்தார். 75 வயதை தொட்ட பிறகு கட்சி மற்றும் அரசு பொறுப்பு யாருக்கும் கொடுக்கப்படாது என்றார்.

இந்த விதிப்படி அத்வானி ஓய்வு பெற்றார். முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்றார். சுமித்ரா மகாஜன் ராஜினாமா செய்த பிறகு ஓய்வு அறிவித்தா். ஆகவே, இந்த விதி இவர்களுக்கும் பொருந்தும்.

பாஜக கட்சிக்குள், பிரதமர் மோடிக்கு அடுத்த நபர் யார் என்ற மோசமாக போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தலைவராக பிரதமர் ஓரங்கட்டி வருகிறார். சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டார். வசுந்தர ராஜே நீக்கப்பட்டார். கத்தார் சஹாப் நீக்கப்பட்டார். டாக்டர் ராமன் சிங் நீக்கப்பட்டர்.

யோகி ஆதித்யநாத் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படுவார் என்ற வதந்தி பரவி வருகிறது.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News