செய்திகள்

ஊரெல்லாம் பெய்தாலும் திண்டுக்கல் மக்களை ஏமாற்றும் மழை

Published On 2018-08-16 10:46 GMT   |   Update On 2018-08-16 10:46 GMT
ஊரெல்லாம் பெய்தாலும் திண்டுக்கல் மக்களை மழை ஏமாற்றுவதால் பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்கு பலத்த சேதமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழகத்தின் நீலகிரி, தேனி, நெல்லை, கோவை உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி அடிவாரப்பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட த்திலும் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. ஆனால் அங்கு மழை ஏதும் இல்லை. திண்டுக்கல் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காமராஜ் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணை முற்றிலும் வறண்டுபோனது. இதுதவிர கொடைக்கானலில் போதுமான மழை இல்லாததால் பழனி மலைஅடிவாரத்தில் உள்ள பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி அணை, பரப்பலாறு அணை நிரம்பவில்லை. இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

ஊரெல்லாம் மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திண்டுக்கல் மாநகரப்பகுதி இருந்தும் மழை இல்லாததால் மக்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். காமராஜர் அணையில் தண்ணீர் முற்றிலும் வறண்டு போனதால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுக்கிறது.

காமராஜர் அணை நீர்பிடிப்பு பகுதியிலும் இனியாவது தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் குடிநீர் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என திண்டுக்கல் மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News