செய்திகள்

விழுப்புரம் அருகே சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2018-08-14 05:04 GMT   |   Update On 2018-08-14 05:04 GMT
விழுப்புரம் அருகே சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவத்தால் திருக்கை கிராமம் சோகத்தில் மூழ்கியது.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ளது அரியலூர் திருக்கை கிராமம். இங்குள்ள ஏரிக்கரையில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அய்யனாரப்பன் சாமியை அலங்கரித்து டிராக்டர் டிப்பரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

டிராக்டரின் முன் பகுதியில் கூலி தொழிலாளிகள் முருகன் (வயது 55), இளங்கோ (50), சங்கர் (38) ஆகியோர் இருந்தனர். அப்போது தாழ்வாக சென்ற மின்சார வயரில் டிராக்டரின் மேல் பகுதி உரசியது. இதில் மின்சாரம் தாக்கி முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இளங்கோ, சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவத்தால் திருக்கை கிராமம் சோகத்தில் மூழ்கியது.
Tags:    

Similar News