செய்திகள்

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றக்கூடாது- திருநாவுக்கரசர்

Published On 2018-07-04 07:13 GMT   |   Update On 2018-07-04 07:13 GMT
மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றக்கூடாது என்று கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
பீளமேடு:

கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. இவர்கள் அந்தந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து 9 மாத காலத்துக்கு மேலாக செய்யாமல் இருப்பதால் அந்த பகுதியின் மக்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பு வரும்பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்து உள்ள நிலையில் மத்தியில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்தை அறிந்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நடத்த கூடாது என்ற எண்ணத்தில் தனி அலுவலர்களின் பணியை காலநீட்டிப்பு செய்துள்ளனர்.


அரசுக்கு எதிர் கருத்து கூறுபவர்களை சிறையில் அடைத்தும், துப்பாக்கி சூடுநடத்தியும், மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்ற கூடாது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களின் அன்றாட பயன்பாட்டு செலவுகள், கட்டுமான பொருட்கள் போன்றவை உயர்ந்துஉள்ளது. இது குறித்து மத்திய அரசு தொடர்ந்து விவாதம் செய்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களை ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு மருத்துவ வசதி மற்றும் பிற வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
Tags:    

Similar News