செய்திகள்

அருப்புக்கோட்டையில் மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்

Published On 2018-06-16 16:22 GMT   |   Update On 2018-06-16 16:22 GMT
அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை:

திருட்டு மணல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முத்திரைத்தாள் துறை அலுவலர் காசிசெல்வி, காரியாபட்டி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டையில் ராமசாமிபுரம் 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி பகுதியில் இருந்து போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் சிக்கின. அதனை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக லாரி டிரைவர்களான ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த மோகன், சாமிநாதன், வேல்முருகன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

Similar News