search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் பறிமுதல்"

    • பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
    • 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், கிருஷ்ணகிரி ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் செக்போஸ்ட் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணி ஆகியோர், ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஓசூரிலிருந்து எம்.சாண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.

    • தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது.
    • நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, காரிப்பட்டி வருவாய் இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் அரசு நிலத்தில் மண்ணை வெட்டி எடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரி விஜயன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர்.
    • தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கொண்டப்ப நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 லாரிகள் நின்றன. அதை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை
    • அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு வட்டம், சாத்தூர் கிராமத்தில் கிராம ஊராட்சி செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ராணிப் பேட்டை உதவி கலெக்டர் வினோத்கு மார் ஆய்வு செய்தார்.

    பின்னர் வரும் வழியில் 2 லாரிகள் மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஆற்காடு வட்டம் விளாரி கிராமத்தில் ஏரியில் அரசு அனுமதி பெற்று மண் எடுக்கப்பட்டு வருகின்றது, ஆனால் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு மண்ணை கொண்டு செல்லாமல் அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அங்கிருந்த 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரிகள் ஆற்காடு தாசில்தார் வசந்தி மேற்பார்வையில் திமிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 5 லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.

    • காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • எம்சாண்ட் தலா 3 யூனிட்டும், 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி மற்றும் பாகலூர் போலீசார் அந்திவாடி மற்றும் காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி எம் சாண்ட் இரண்டு டிப்பர் லாரிகளில் தலா 3 யூனிட்டும்,மற்றொரு லாரியில் 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிகளை பறிமுதல் செய்தனர் .

    மேலும் லாரி டிரைவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரி நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை சாலையில் மூங்கில்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் உடை கற்களை கடத்திவந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கற்களை மாதேப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுதுத புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. அது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சிவக்குமார் (43), தர்மலிங்கம் (38), அருண்குமார் (28), பிரசாந்த் (28) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் ரூ.300 பறிமுதல் செய்தனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் இரண்டு டிப்பர் லாரிகளில் நொரம்பு மண் அள்ளிக் கடத்துவது தெரியவந்தது.
    • வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திய போது டிப்பர் லாரி உரிமையாளர் மல்லா புரத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் ரவி என்பது தெரியவந்தது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஜனப்பனூர் அருகே அனுமதியின்றி நொரம்பு மண் அள்ளுவதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் இரண்டு டிப்பர் லாரிகளில் நொரம்பு மண் அள்ளிக் கடத்துவது தெரியவந்தது அலுவலர்களை பார்த்தவுடன் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திய போது டிப்பர் லாரி உரிமையாளர் மல்லா புரத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் ரவி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து இரண்டு டிப்பல்லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து தாசில்தார் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லாரி உரிமையாளர் மற்றும் தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட 7 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட 7 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×