செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த அய்யாக்கண்ணுவை கைது செய்வதா? - சட்டசபையில் துரைமுருகன் கேள்வி

Published On 2018-06-07 08:23 GMT   |   Update On 2018-06-07 08:23 GMT
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த அய்யாக்கண்ணுவை கைது செய்வதா என்று சட்டசபையில் இன்று துரைமுருகன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது:-

சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு அவர் இருக்கும் போது பல்வேறு தரப்பு மக்களும் பார்க்க வருவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது உதவி பெற அவரை பார்ப்பார்கள். மனு கொடுப்பார்கள். இது வழக்கமாக எல்லா கட்சியிலும் நடக்கும்.

விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு இன்று எதிர்க்கட்சி தலைவரை பார்க்க அனுமதி கேட்டு இருந்தார். அவரை 12 மணிக்கு வருமாறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி அய்யாக்கண்ணு பார்க்க வந்தார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை வழியிலேயே மடக்கி பிடித்து பார்க்கவிடாமல் வட பழனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர். இது நியாயம்தானா? இதை முதல்-அமைச்சரின் கவனத்துக்காக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உதவியாளரை அழைத்து ஏதோ கூறினார். அதற்கு துரை முருகன் சிரித்தபடியே தலையாட்டினார்.

Tags:    

Similar News