செய்திகள்

அப்பாவி மக்கள் மீது வழக்கு-கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்: நல்லக்கண்ணு

Published On 2018-06-04 05:03 GMT   |   Update On 2018-06-04 05:03 GMT
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும் என்று நல்லக்கண்ணு தெரிவித்தார். #Thoothukudifiring #Nallakannu
திருச்சி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு தற்போது முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.


மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நாட்டை பிளவுப்படுத்துவது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் செய்த திருத்தம் தவறு. சாதி வெறி, மத வெறி சக்திகள் தான் தேச விரோத சக்திகள்.

சிவகங்கை சம்பவத்தை உதாரணமாக கொண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #Nallakannu
Tags:    

Similar News