செய்திகள்

சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பில் 3-வது அணி குறித்து பேசவில்லை- கனிமொழி எம்பி

Published On 2018-05-02 03:41 GMT   |   Update On 2018-05-02 03:41 GMT
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பின்போது 3-வது அணி அமைப்பது குறித்து பேசவில்லை என கனிமொழி எம்பி கூறியுள்ளார். #MKStalin #Kanimozhi #DMK
ஆலந்தூர்:

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பின்போது 3-வது அணி அமைப்பது குறித்து பேசவில்லை. அரசியல் கூட்டணி குறித்த நோக்கத்துடன் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சந்திப்பின்போது மாநில உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தை தான் நடந்தது.



மத்திய அரசிடம் இருந்து எதையும் கேட்டு வாங்கக்கூடிய நிலையில் அ.தி.மு.க. இல்லாததால் ஏற்கனவே அவர்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர்களை மீசை இல்லாமல் பார்ப்பது மேலும் பரிதாபமாகிவிடும். அவர்களுக்கு ஏன் இந்த கஷ்டம்? கல்வித்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கடந்த கால வரலாறுகளை படித்து பார்க்க வேண்டும்.

காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் துரைமுருகன் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Kanimozhi #DMK
Tags:    

Similar News