செய்திகள்

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னரின் விசாரணை அமைப்பை ஏற்க முடியாது- அமீர் பேட்டி

Published On 2018-04-26 11:33 GMT   |   Update On 2018-04-26 11:33 GMT
பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் வி.வி.ஐ.பி.க்களுக்கு தொடர்பு இருப்பதால் கவர்னரின் விசாரணை அமைப்பை ஏற்க முடியாது என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார். #nirmaladevi #directoramir #tngovernor

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டைரக்டர் அமீர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ளதால் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால் ஏதாவது மனுவை தாக்கல் செய்து அதை தள்ளிப்போடுவதற்கான வேலைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

கர்நாடகா தேர்தல் முடியும் வரை காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

மத்திய அரசு தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற 28-ந்தேதிக்கு பின்னர் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும்.

அனைத்து தரப்பினரும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஊடக பெண் ஊழியர்கள் குறித்து எஸ்.வி. சேகர் அவதூறாக பேசியது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் அவர், இதுவரை கைது செய்யப்படவில்லை.

தமிழக தலைமை செயலாளரின் உறவினர் என்பதால்தான் அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கவர்னர் விசாரணை கமி‌ஷன் அமைப்பது ஏற்புடையது அல்ல.


இந்த பிரச்சினையில் வி.வி.ஐ.பி.க்களுக்கு தொடர்பு இருப்பதாக பதிவில் கூறப்பட்டுள்ளது. இதனால் இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #nirmaladevi #directoramir #tngovernor

Tags:    

Similar News