search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amir"

    • சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக் கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் அமீரை டெல்லிக்கு நேரில் அழைத்து 10½ மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பல்வேறு தகவல்களை திரட்டியுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஜாபர்சாதிக் போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாக கூறப்படுவதால் இந்த பணம் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய தகவல்களையே அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது திரட்டி வருகிறார்கள்.

    சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளதா? சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அது தொடர்பாகவே ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் சிறையில் உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த இயக்கு னர் அமீர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

    இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதன் முடிவில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். சிம்புவின் மாநாடு படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

    இதில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

    அமீர்

    அமீர்

     

    இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது, "தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் எனிடம் பேசாமல் இருந்தார்.

    நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை.

    உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்" என்று கூறினார்

    • நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிக்பாஸ் பிரபலங்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.


    அஜித் - பிக்பாஸ் பிரபலங்கள்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.


    பாவனி பதிவு

    இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பாவனி, அஜித்தை அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.



    • மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர்.
    • தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்துகிறார்.

    மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை படித்தவர் அமீர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த வடசென்னை திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    தற்போது போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் உலக உடற்தகுதி கூட்டமைப்பு (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்துகிறார்.

    அமீர்

    அமீர்

     

    இது குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர். இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல.

    அமீர்

    அமீர்

     

    சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம் என்றார்.

    ×