பிக்பாஸ் பிரபலங்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி.. ட்ரெண்டாகும் புகைப்படம்..

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் பிரபலங்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அஜித் - அமிர் - பாவனி
அஜித் - அமிர் - பாவனி
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.

அஜித் - பிக்பாஸ் பிரபலங்கள்

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

பாவனி பதிவு

இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பாவனி, அஜித்தை அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com