செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம்- ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் போலீஸ் காவல்

Published On 2018-04-26 07:15 GMT   |   Update On 2018-04-26 07:15 GMT
நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. #NirmalaDevi #Karuppasamy
சாத்தூர்:

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருப்பசாமி நேற்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஒரு நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சபீனா உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற காவல் முடிந்ததைத் தொடர்ந்து போலீசார் சாத்தூர் கோர்ட்டில் இன்று கருப்பசாமியை ஆஜர்படுத்தினர்.

அப்போது 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட்டு கீதா 4 நாட்கள் கருப்பசாமியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். #NirmalaDeviAudio #Tamilnews
Tags:    

Similar News