செய்திகள்

திருப்பூரில் செல்போன்களை பறித்த வாலிபர் கைது

Published On 2018-04-18 12:27 GMT   |   Update On 2018-04-18 12:27 GMT
திருப்பூரில் நடந்து சென்றவர்களிடம் செல்போன்களை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் தாமரைக்கனி (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் செல்போனில் பேசியபடி கே.வி.ஆர்.நகரில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென்று தாமரைக்கனியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றார்.

இதை கவனித்த தாமரைக்கனி உடனடியாக சத்தம் போட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (22) என்பதும், பனியன் நிறுவன தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும் நேற்று காலை ஆண்டிப்பாளையத்தில் ரோட்டில் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்த நவீன்பிரசாத் (22) என்பவரிடம் செல்போனை அய்யப்பன் பறித்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News