செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், சேதமான கார் அப்பளம் போல் நொறுங்கி கிடப்பதையும் படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது கார் மோதல்- 4 பேர் பலி

Published On 2018-04-09 09:02 GMT   |   Update On 2018-04-09 09:02 GMT
திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல்:

கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து ஒரு காரில் வந்தனர். காரை அப்துல் ரஜித் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக சுற்றிப் பார்த்து விட்டு இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோட்டில் கட்டகாமன்பட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ், காரின் மீது ஏறி நின்றதில் உள்ளே இருந்த அனைவரும் கூக்குரலிட்டனர்.

காரின் முன் பகுதி முழுவதும் அப்பளம் போல் சுக்கு நூறாக உடைந்தது. விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர், காருக்குள் இருந்த ரெஜினா பேகம் என மொத்தம் 2 ஆண்கள், 2 பெண்கள் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 2 சிறுவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக காரும், அரசு பஸ்சும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்தில் இறந்த மற்ற 2 பேரின் விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி அதிகம் இருந்த இப்பகுதியில் நடந்த விபத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News