செய்திகள்

திருச்சி உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- கமல்ஹாசன் இன்று வழங்கினார்

Published On 2018-04-04 11:08 GMT   |   Update On 2018-04-04 11:08 GMT
திருச்சி திருவெறும்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியை நடிகர் கமல்ஹாசன் இன்று வழங்கினார்.
திருச்சி:

தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா , தனது மனைவி உஷாவுடன் கடந்த மாதம் 7-ந்தேதி திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் ராஜாவும், உஷாவும் தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

உஷாவின் அம்மா லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்

இந்தநிலையில் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சியில் இன்று மாலை நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அவர் காஜாமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.

அங்கு உஷாவின் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மீதி ரூ.5 லட்சத்தை உஷாவின் கணவர் ராஜாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். . #Tamilnews
Tags:    

Similar News