செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2018-03-28 12:54 GMT   |   Update On 2018-03-28 12:54 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் பணிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளை எடுத்து வைத்து போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாட்டிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக ஆலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமரெட்டியாபுரம், வீரபாண்டியபுரம், குமாரகிரி உள்ளிட்ட கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். அப்போது தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தாசில்தார்களும் உடனிருந்தனர். அந்த குழுவினர் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
Tags:    

Similar News