செய்திகள்

மேலும் 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-03-21 07:55 GMT   |   Update On 2018-03-21 07:55 GMT
மேலும் 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி பேசினார். அப்போது கூறிய அவர், “இந்த பட்ஜெட் புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத பற்றாக்குறை பட்ஜெட். வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் இல்லை. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி.யால் 14 சதவீதம் வரி இழப்பு ஏற்படும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். பல்வேறு பொருட்களுக்கு கூடுதல் வரி இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து 394 பொருட்களுக்கு வரி குறைப்பு பெற்றோம். அடுத்த மேலும் 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.43 ஆயிரத்து 43 கோடி வருவாய் கிடைத்தது. தற்போது ரூ.50 ஆயிரத்து 148 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனால் ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு வரவேண்டிய வருவாயில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews


Tags:    

Similar News