செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் - த.மா.கா. ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-20 09:59 GMT   |   Update On 2018-03-20 09:59 GMT
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, “காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கூடுதல் நெருக்கடி கொடுக்க வேண்டும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், சக்தி வடிவேல், பொதுச்செயலாளர் ஞான சேகரன், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம். பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சீனிவாசன், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், விக்டரி மோகன், ராயபுரம் பாலா, அண்ணாநகர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, அனுராதா அபி, துறைமுகம் செல்வக்குமார், சைதை நாகராஜ், தி.நகர் கோதண்டன், கக்கன், மந்தவெளி இராம.அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் ஒரு டிராக்டரை ஜி.கே.வாசனே ஓட்டி சுற்றி வந்தார். #tamilnews

Tags:    

Similar News