செய்திகள்

கமல் கட்சியில் 50 ஐகோர்ட்டு வக்கீல்கள்

Published On 2018-03-19 10:41 GMT   |   Update On 2018-03-19 10:41 GMT
சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் 50 பேர் கமல் கட்சியின் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் உள்ளூர் பிரச்சினைகள் பற்றியும் விவாதித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலேயே கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 10 பேரிடம் கமல் ஆலோசனை நடத்தினார். இதில் கமல் கட்சி நிர்வாகிகளும், சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் சிலரும் பங்கேற்றனர்.

ஐகோர்ட்டு வக்கீல்கள் 50 பேரும் இன்று கமல் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களை ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைத்து கொண்டனர்.

இது தொடர்பாக வக்கீல்கள் கூறும்போது, தாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் என்றும் கமலின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது கட்சியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News