செய்திகள்

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது - ரெயில் நேரங்களில் மாற்றம்

Published On 2018-03-18 09:25 GMT   |   Update On 2018-03-18 09:25 GMT
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால், அந்த வழியாக செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #Trains #Timings
சென்னை:

கம்பத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சரக்கு ரெயில் இன்று தடம் புரண்டது. அரக்கோணம் - காட்பாடி மார்க்கத்தில் உள்ள மேல்பாக்கம் என்ற பகுதியில் வந்தபோது சரக்கு ரெயிலின் இரு பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.

தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மார்க்கம் வழியாக செல்லும் ரெயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரெயில் பகல் 1.35க்கு பதிலாக பிற்பகல் 3.40க்கும்,  சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.30க்கு பதிலாக பிற்பகல் 3.55க்கும்,  சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி வாராந்திர ரெயில் பிற்பகல் 3 மணிக்கு பதிலாக மாலை 4.45 மணிக்கும்,  சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் பிற்பகல் 3.15க்கு பதிலாக மாலை 4.45 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 3.35க்கு பதிலாக மாலை 4.15 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இரவு 8.55க்கு பதிலாக இரவு 10.30 மணிக்கும் புறப்படும்என தெரிவித்துள்ளது. #Trains #Timings #tamilnews
Tags:    

Similar News