search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு ரெயில்"

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
    • தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

    அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
    • நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சேலம் அணுமின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்த போது கடைசி பெட்டியில் புகை வந்தது. இதைப் பார்த்த திருவள்ளூர் ரெயில் நிலைய போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.

    பின்னர் அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்தனர்.

    நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது. அந்தப் பெட்டியை தனியாக துண்டித்தனர்.

    உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு தீ பற்றிய பெட்டியை எடுத்துச் சென்றனர். பின்னர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயிலில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து நிலக்கரி அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
    • தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.

    அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது
    • அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் அரிசி, வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து இன்று 42 வேகன்களில் 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் வந்த ரேசன் அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றினார்கள்.

    பின்னர் லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
    • அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    தருமபுரி:

    சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.

    பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    • ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி
    • ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
    • 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு, கோதுமை மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி
    • தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப் படுகிறது. ஆந்திராவில் இருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    சரக்கு ரெயிலில் இருந்து ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அரிசி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    • சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது.
    • ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது. இதனால் பதறிப்போன ரெயில்வே கேட் கீப்பர் உடனே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இல்லையென்றால் ரெயில் தொடர்ந்து சென்றால் மேலும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ரெயில் பாதையில் இருந்து சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணிகளின் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் 5 மணிநேரம் தாமதமாக சென்றது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.

    அந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக வந்து, தருமபுரி மாவட்டம், தொப்பூர், தருமபுரி, மாரண்டஅள்ளி வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, ஓசூர் வழியாக வந்து பெங்களூருவை அடைவது வழக்கம்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நள்ளிரவு 2 மணியளவில் மாரண்டஅள்ளி வழியாக ராயக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலின் சக்கரங்களில் தொடர்ச்சியாக தீப்பொறியுடன் புகை வெளியேறி கொண்டிருந்தது.

    இதை கவனித்த ரெயில்வே ஊழியர் உடனடியாக ராயக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரக்கு ரெயில் செல்வதற்கான சிக்னல்கள் ஆப் செய்து விட்டார்.

    திடீரென்று ரெயில்வே பாதையில் சிக்னல்கள் கிடைக்காததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது என்று எண்ணி சரக்கு ரெயிலை என்ஜின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.

    அப்போதுதான் அந்த சரக்கு ரெயில் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறியதை கவனித்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயிலின் சக்கரங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது 6 பெட்டிகள் ரெயில்வே பாதையில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த சேலம் ரெயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்டம் அதிகாரிகள், போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    அதிகாலையிலேயே 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களை வரவழைத்து ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதையில் இருந்து 6 பெட்டிகளின் சக்கரங்கள் விலகியதற்கான காரணம் என்ன? என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய குர்லா எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு செல்லக்கூடிய பாசஞ்சர் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் தருமபுரி, மொரப்பூர் வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×