என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சரக்கு ரெயில் தீ விபத்து எதிரொலி - திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரிப்பு
- எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது. ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. விண்ணை முட்டும் புகையுடன் தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இதனால் திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் தீ அணைக்கப்பட்டாலும் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நீங்கி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு 2 நாட்கள் வரையில் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






