என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சரக்கு ரெயில் தீ விபத்து மீட்பு பணி - அரக்கோணம் பேரிடர் மீட்பு படை விரைவு
    X

    சரக்கு ரெயில் தீ விபத்து மீட்பு பணி - அரக்கோணம் பேரிடர் மீட்பு படை விரைவு

    • தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
    • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

    பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 60 பேர் கொண்ட 2 குழுக்கள் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×