பயணிகள் ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயருகிறது

கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயருகிறது
Published on

சென்னை:

தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது.

இந்த கட்டணத்தை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் உயர்த்த உள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ரெயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. சரக்கு ரெயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வுக்கு என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது என்றும், எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு இதில் அடங்கும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே கடந்த 1-ந்தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com