என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சரக்கு ரெயிலில் தீ விபத்து - சிலிண்டரை எடுத்து சென்று பொதுமக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர்
- தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
- அப்பகுதிமக்களுக்கு அமைச்சர் நாசர் உணவு வழங்கினார்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டறிந்தார்.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. சிலிண்டரை எடுத்து செல்ல அப்பகுதி மக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர், மக்களுக்கு உணவு வழங்கினார்.






