என் மலர்
நீங்கள் தேடியது "சேவை கட்டணம்"
- கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
- கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது.
இந்த கட்டணத்தை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் உயர்த்த உள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ரெயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. சரக்கு ரெயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வுக்கு என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது என்றும், எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு இதில் அடங்கும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே கடந்த 1-ந்தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐ.ஆர்.சி.டி.சி அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.
- பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
சென்னை:
இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் www.air.irctc.co.in இணையம் வழியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் கிடையாது. பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
வருகின்ற நாட்களில் வெளிநாடு பயணம், புத்தாண்டு கொண்டாட்டம் போன்றவற்றிற்காக புக்கிங் செய்பவர்களுக்கு டிக்கெட் தவிர கூடுதலாக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த சலுகை இன்று முதல் 27-ந்தேதி வரை வழங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
- ஆஞ்சநேயர் கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது.
- வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னை நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் 32 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது. இதற்கு சேவை கட்டணங்கள் உள்ளன.
இந்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பூர்ண வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆகவும், சிறிய வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.800 ஆகவும், தீப நெய் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை பக்தர்கள் வருகிற 28-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.






